ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோன்ற பேட்டிங்கை பார்த்ததாக நினைவில்லை! குமார் சங்ககாரா
நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ஜோஸ் பட்லரை இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா புகழ்ந்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 824 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதம் அடங்கும்.
இந்த நிலையில் பட்லரின் பேட்டிங் குறித்து பேசிய இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாரா, 'ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோன்ற பேட்டிங்கை நான் பார்த்ததாக நினைவில்லை. அவர் அனைத்து வகை ஸ்ட்ரோக்-யையும் ஆடினார். அன்பான மனிதர். அவரால் ஆட்டத்தை புரிந்துகொண்ட எந்த நேரத்திலும் வேகத்தை அதிகரிக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Rajasthan Royals
மேலும் அவர் கூறுகையில், தொடரின் ஒரு கட்டத்தில் அவர் படபடப்பாக இருந்தார். ஆனால் அவர் தன் நிலையை உணர்ந்து பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 30 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் 50 பந்துகளை சந்திக்கும் போது திடீரென அவரது ஸ்கோர் 80 அல்லது 90 ஆக இருக்கும். அதுதான் அவரது பலம் என புகழ்ந்துள்ளார்.
Photo Credit: Rajasthan Royals