நம்பமுடியாத முயற்சி! இலங்கைக்கு என்னவொரு தருணம் - வியந்து பாராட்டிய சங்கக்காரா
மகளிர் இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக்கிண்ணத்தை வென்றதற்கு குமார் சங்கக்காரா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதல் முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. தொடரின் சிறந்த வீராங்கனை விருதை அணித்தலைவர் சமரி அதப்பத்து (chamari athapaththu) பெற்றார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் குமார் சங்கக்காரா (Kumar Sangakkara) தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், ''என்னவொரு வெற்றி. நெருங்கி வந்துவிடும் என்று நினைத்தேன், ஆனால் இது அபாரம். மகளிர் இலங்கை அணியின் நம்ப முடியாத முயற்சி இது. இலங்கைக்கு என்ன ஒரு தருணம். சமரி அதப்பத்து, ஹர்ஷிதா மற்றும் கவிஷா மற்றும் அணியினர் அனைவரும் வரலாறு படைத்துள்ளீர்கள்'' என வியந்து பாராட்டியுள்ளார்.
What a win. Thought it would be close but this is a canter. Incredible effort from the @OfficialSLC women. What a moment for Sri Lanka. @58Chamari , Harshitha and Kavisha and the team you have made history. pic.twitter.com/yEsMz7rdyj
— Kumar Sangakkara (@KumarSanga2) July 28, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |