இளம் வீரர் மீது கடும் விமர்சனம்! ஆதரவுக்குரல் கொடுத்த சங்ககாரா
ரியான் பராக்கிற்கு அதீத திறமை உள்ளது என ராஜஸ்தான் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்ககாரா ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அந்த போட்டியில் பராக் வெறும் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். மொத்தமாக இந்த தொடரில் 17 போட்டிகளில் 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங் சொதப்பல் ஒருபுறம் இருந்தாலும், அவர் அதிகமாக விமர்சிக்கப்படுவது நடத்தையால் தான்.
கேட்ச் பிடித்த உடனே பந்தை கீழே கொண்டு சென்று நடுவர்களை சரி பார்க்க சொல்லி கிண்டல் செய்வது, பீல்டிங் செய்யும்போது சீனியர் வீரர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது, எதிரணி வீரர்களை முறைப்பது என சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்.
Photo Credit: Sportzpics / IPL media
பராக்கின் இதுபோன்ற செயல்களால் ரசிகர்கள் மட்டுமன்றி முன்னாள் வீரர்களும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், ரியான் பராக்கிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்ககாரா ஆதரவு அளித்துள்ளார்.
Photo Credit: BCCI/IPL
அவர் பராக் குறித்து கூறுகையில், 'ரியான் பராக்கிற்கு அதீத திறமை இருப்பதாக நினைக்கிறேன். அடுத்த சீசனில் அவரை முன்னதாக களமிறக்கி விளையாட வைக்க வேண்டும். கடைசி நேர ஹிட்டராக இல்லாமல், ஆரம்ப நிலை மிடில் ஆர்டர் வீரராக அவர் மாறுவதற்கு ஒரு வித சீர்படுத்தலை எதிர்நோக்குகிறேன். ஏனென்றால், சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சீசனில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான, வலுவான 11 வீரர்களை கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
Photo Credit: BCCI/IPL