சனிபகவான் தரும் சச யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறதாம்
சனிபகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.
இது கால சக்கரத்திற்கு 11ஆம் வீடு. சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் காலம் ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகாயோக காலமாக அமைகிறது.
அந்தவகையில் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்
தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பத்துக்கு உரிய அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகமான காலம். கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும்.
புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. சமூகத்திர் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.
சிம்மம்
இந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்குத் தலைமை பதவி கிடைக்கும். கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும்.
கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும்.
சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்ட சனியாக அமர்கிறார். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். சுகமான இடத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சந்தோசங்கள் அதிகம் நடைபெறும் காலம் கல்வி திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள்.
பத்தாவது பார்வையாக சனி பார்வை உங்க ராசி மீது விழுகிறது. சனி யோகம். வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும். தொழில் வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும். வெளிநாடு பயணம் செய்யலாம். காரணம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி பார்வை விழுகிறது. தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள்.
பயணங்களால் தன வரவும் கிடைக்கும். சனி பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் தொல்லைகள் விலகும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு நன்மையான காலம். சொத்துக்கள் வாங்கலாம். சனி பார்வை உங்க ராசி மீது விழுவதால் நிம்மதியும் நம்பிக்கையும் கொடுப்பார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021