வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: புதிய ஆண்டில் எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம்?
Saturn Transit these Zodiac Lucky: சனியின் வக்ர நிவர்த்தியால் பல நன்மைகளைப் பெறும் ராசியினரைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
சனி வக்ர நிவர்த்தி
ஜோதிடத்தில் சனி பகவானின் ஒவ்வொரு செயலுக்கு ஒவ்வொரு பலன் கிடைக்கும். மேலும் ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரும் சனி பகவான், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுகின்றார்.
மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசியின் அதிபதியான இவர் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகின்றார். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் இந்நிகழ்வினால் அனைத்து ராசியினரின் வாழ்க்கையில் தாக்கமும், சில ராசியினருக்கு நன்மையும் கிடைக்கும். அவ்வாறு நன்மையை பெறும் ராசிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியிருக்கு 10வது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ள நிலையில், பல பிரச்சனைகள் முடிவிற்கு வருமாம்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், நிதி ரீதியாக நல்ல முன்னேற்றமும் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிகழ்வதுடன், மாணவர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாகவே இருக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3வது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ள நிலையில், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்குமாம்.
பொருளாதார வசதி அதிகரிப்பதுடன், ஆடம்பர வாழ்க்கையும் வாழ்வீர்கள். பணியிடத்தில் உங்களது இலக்குகளையும் அடைய வாய்ப்புள்ளது.
நீண்ட கால உழைப்பிற்கான பலனை பெறுவதுடன், பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்குமாம். ஆக மொத்தம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசியினரின் 2வது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ள நிலையில், தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைப்பதுடன், கடின உழைப்பிற்கான ஊதியத்தையும் தற்போது பெறுவீர்கள்.
பணியிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிப்பதுடன், வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்குமாம். அதே போன்று வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், ஒவ்வொரு முயற்சிக்கும் வெற்றியினை பெறுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |