முகேஷ் அம்பானி மருமகள்களை விடவும் கோடிகளில் புரளும் சானியா மிர்சா: அவரது சொத்து மதிப்பு
உலகில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டு மருமகள்களை விடவும் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பல கோடிகளுக்கு அதிபதி என்றே தெரிய வந்துள்ளது.
சொத்து மதிப்புக்கு நிகரானவர்களையே
முகேஷ் அம்பானி குடும்பமானது தற்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களால் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆனால் பலர் எண்ணக்கூடும், முகேஷ் அம்பானி தமது சொத்து மதிப்புக்கு நிகரானவர்களையே மருமகளாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்று. உண்மையில் முகேஷ் அம்பானியின் இரு மருமகள்களையும் விட டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா தொழில்முறையாக உச்சத்தில் இருந்த காலம் அத்தனையும் பெருந்தொகை சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் உடன் விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தற்போது அவர் தமது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சானியா மிர்சாவைப் பற்றிய ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால்,
விளம்பரத்திற்கு ரூ 25 கோடி
அவரது நிகர சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் மருமகள்களான ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் சொத்து மதிப்பை விடவும் பல மடங்கு அதிகம்.
சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் சானியா மிர்சாவின் சொத்து மதிப்பு ரூ 216 கோடி என்றே கூறப்படுகிறது. முன்னாள் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா ஒவொரு விளம்பரத்திற்கும் ரூ 25 கோடி கட்டணமாக வசூலிக்கிறார்.
அத்துடன், தொழில் ரீதியாக ஒரு டென்னிஸ் பயிற்சி கூடம் ஒன்றும் செயல்படுத்தி வருகிறார். இதில், முகேஷ் அம்பானியின் மருமகள் ஷ்லோகா மேத்தாவின் சொத்து மதிப்பு ரூ 120 கோடி என்றே கூறப்படுகிறது.
ஆனந்த் அம்பானியை திருமணம் செய்யவிருக்கும் ராதிகாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ 10 கோடி என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |