கண்ணீரை அடக்க முடியாமல் அழுத சானியா மிர்சா., முடிவுக்கு வந்த கிராண்ட்ஸ்லாம் பயணம்
சானியா மிர்சா தனது கிராண்ட்ஸ்லாம் பயணம் முடிவுக்கு வந்ததை நினைத்து கண்கலங்கியுள்ளார்.
கண்கலங்கிய சானியா மிர்சா
அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியுடன் தனது புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் பயணத்தை முடித்துக் கொண்ட சானியா மிர்சா கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்.
இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு ஆளுமைகளில் ஒருவரான சானியா மிர்சா, அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், தனது புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் பயணத்தை வெள்ளிக்கிழமை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
பிரேசில் ஜோடியான லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் ஜோடி, இறுதிப் போட்டியில் இந்திய ஜோடியான சானியா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடியை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தங்களது முதல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றது.
ஆட்டம் முடிந்ததும், பிரேசில் ஜோடியை சானியா வாழ்த்தி, தகுதியான வெற்றிக்காக அவர்களைப் பாராட்டினார்.
ஆனால், அவர் தனது பயணத்தைப் பற்றி பேசத் தொடங்கியதும், கண்ணீரை அடக்க போராடினார்.
அவுஸ்திரேலிய ஓபன் 2023-உடன் தனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை முடித்துக் கொள்வதாக சானியா ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும், அவர் தனது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் முன் இன்னும் சில போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand career at.”
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
அவர் பேசுகையில், தனது தொழில் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியதை நினைவுகூர்ந்தார். எனவே தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையை முடிக்க இதைவிட சிறந்த அரங்கு இருக்கமுடியாது என்பதைக் கூறினார்.
மேலும், "ராட் லாவர் அறங்கள் சிறப்பு வாய்ந்தது. கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் என் மகனுக்கு முன்னால் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை." ஒன்று அவர் கூறினார்.
சானியாவுக்கு இது 11-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியாகும். அவர் மொத்தம் 43 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார், அதில் 6 கிராண்ட் ஸ்லாம்கள் அடங்கும். மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் 91 வாரங்களுக்கு WTA நம்பர் 1 வீராங்கனையாகவும் இருந்தார்.