இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் RCB-யின் தலைமை பயிற்சியாளராக நியமனம்
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் RCB-யின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அறிவித்துள்ளது.
Mike Hesson-க்கு பதிலாக சஞ்சாய் பங்கர் RCB அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்வார்.
Mike Hesson,RCB அணியின் கிரிக்கெட் நடவடிக்கை இயக்குனராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCB பேட்டிங் ஆலோசகராக முன்பு பணியாற்றிய பாங்கர், RCB தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற விரும்புவதாக கூறினார்.
? ANNOUNCEMENT ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 9, 2021
Sanjay Bangar, former interim head coach of #TeamIndia and batting consultant for RCB, is all set to #PlayBold as the new head coach of RCB for the next two years.
Congratulations, Coach Sanjay! We wish you all the success.#WeAreChallengers #IPL2022 pic.twitter.com/AoYaKIrp5T
இதுவரை 14 முறை நடந்துள்ள ஐபிஎல் தொடரில், கோலி தலைமையிலான RCB அணி ஒரு முறை கூட சாம்பியனம் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.