தோனியை போல செய்தார்.. ஐபிஎல் கோப்பையை வென்றார்! ஹர்திக்கை புகழ்ந்த முன்னாள் வீரர்
இறுதிப்போட்டியில் தோனியை போல ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழ்ந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியை வழி நடத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை புகழ்ந்துள்ளார்.
Photo Credit: BCCI/IPL
ஹர்திக் குறித்து அவர் கூறுகையில், 'சில சமயங்களில் கமெராக்கள் செயல்படும்போது வீரர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருப்பார்கள். ஹர்திக் அந்த விடயத்தில் மிகவும் நிதானமாக இருந்தார். அதுமட்டுமன்றி பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக இருந்தார். அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
Photo Credit: IPL
கேப்டன் பதவியை பொறுத்தவரை தோனியை போலவே ஹர்திக்கும் செயல்பட்டார். அவரது முடிவுகளும் தோனியை போலவே இருந்தது. குறிப்பாக, இறுதிப்போட்டியில் சாய் கிஷோரை 16 மற்றும் 18வது ஓவர்களை வீச வைத்தது சிறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியுடன் அவர் கேப்டன்சி செய்வதாக தெரிந்தாலும், நிதானமாகவே களத்தில் இருந்தார்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Getty Images
Photo Credit: Twitter/hardikpandya7