அஸ்வின் ஒன்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய சக்தி அல்ல! அவரை அணியில் சேர்க்கமாட்டேன்... வேண்டுமென்றே வம்பிழுத்த பிரபல வீரர்
அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் பெரிய சக்தி அல்ல என கூறி அவரை வம்பிழுத்துள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
ஐபிஎல் 2021 சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் 13 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையே எடுத்தார். அஸ்வின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வான பிறகும் கூட அஸ்வின் டெல்லி அணிக்காக சரியாக வீசவில்லை.
அவர் குறித்து இந்திய முன்னாள் வீரர் மஞ்சுரேக்கர் பேசுகையில், அஸ்வின் குறித்துப் பேசி அதிகமாக நேரத்தை செலவிட்டு விட்டோம். அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் பெரிய சக்தி அல்ல.
ஏனெனில் அஸ்வின் கடந்த 5-7 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் பற்றி பேசினோம் அது சரியே. ஏனெனில் அதில் அவர் ஒரு ஃபண்டாஸ்ட்டிக் பவுலர். இங்கிலாந்தில் அவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடவைக்காதது கேலிக்கூத்து.
ஆனால் டி20 கிரிக்கெட், ஐபிஎல் பற்றி பேசும்போது அஸ்வின் தேறவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்றுதான் அவர் வீசுகிறார் என்பதாகவே அவர் நமக்கு காட்டியுள்ளார், அஸ்வின் போன்ற ஒருபவுலரை நான் என் டி20 அணிக்குத் தேர்வு செய்யமாட்டேன்.
பந்துகள் திரும்பும் பிட்ச்களாக இருந்தால் கூட நான் அஸ்வினைக் காட்டிலும் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், சகல் போன்றவர்களைத்தான் தேர்வு செய்வேன். இவர்கள் விக்கெட்டுகளைப் பெற்று தருவார்கள் என கூறியுள்ளார்.