தாயாரிடம் ரூ 2,000 கடனாக வாங்கி தொடங்கிய தொழில்... இன்று அதன் மதிப்பு ரூ 1600 கோடி
போதிய பொருளாதார வலுவும் உதவியும் இல்லாமல் ஒருவர் சொந்தமாகத் தொழிலைத் தொடங்குவது என்பது எளிதானது அல்ல. சொந்தமாக உருவாக்கிய ஒரு பிராண்டை நிலைநிறுத்த ஒருவர் இரவு பகல் பாராமல் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
தந்தை ஆயுர்வேத மருத்துவர்
ஆனால் இவர் அதைச் செய்து தனது பிராண்டை மிகவும் பிரபலமாக்கியுள்ளதுடன், அதை ஒவ்வொரு வீட்டையும் சென்றடையவும் வைத்துள்ளார். சஞ்சீவ் ஜுனேஜா தனது தாயாரிடமிருந்து ரூ.2000 கடனாக வாங்கி தொடங்கிய தொழில், இன்று ரூ.1,600 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது.
அவர் Kesh King பிராண்டுடன் நின்றுவிடவில்லை, ஒன்றன் பின் ஒன்றாக புதிய பிராண்டுகளை உருவாக்கி மக்கள் ஆதரவையும் ஈர்த்துக்கொண்டார். Kesh King மட்டுமின்றி அவரது மிகவும் பிரபலமான பிராண்டுகள் Pet Saffa, Roop Mantra, Sachi Saheli மற்றும் D. Ortho ஆகியவை.
சஞ்சீவ் ஜுனேஜா அம்பாலாவைச் சேர்ந்தவர், அவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர். இதனாலையே சஞ்சீவ் தனது தந்தையின் மருத்துவமனையில் ஆயுர்வேத மருந்துகளின் வேலைகளையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
1999-ல் அவரது தந்தை இறந்த பிறகு, குடும்பப் பொறுப்பு அவரது தோள்களில் விழுந்தது. அவர் தனது தந்தையின் ஆயுர்வேத மருத்துவப் பணியை விரிவுபடுத்தினார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் தனது தாயாரிடமிருந்து ரூ.2000 கடன் வாங்கி சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார்.
SBS குழும நிறுவனங்களை உருவாக்கி, ராயல் கேப்ஸ்யூலை சந்தையில் அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் FMCG துறையில் நுழைவதற்காக அவர் கேஷ் கிங் ஹேர் ஆயிலை அறிமுகப்படுத்தினார்.
தேவை தானாகவே அதிகரிக்கும்
Hindustan Unilever, Emami போன்ற பெரும் நிறுவனங்கள் கோலோச்சும் FMCG துறையில் ஒரே ஒரு பிராண்ட் ஹேர் ஆயிலுடன் அந்த சந்தையில் நுழைவது சஞ்சீவுக்கு எளிதாக இருக்கவில்லை.
இதனால், சஞ்சீவ் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சி எடுப்பதை விடுத்து தனது எண்ணெய் பிராண்டில் கவனம் செலுத்தினார். ஒரு பொருள் தரமானதாக இருந்தால், மக்கள் நிச்சயமாக அதை வாங்குவார்கள், தேவை தானாகவே அதிகரிக்கும் என்பது அவருக்குத் தெரியும்.
சில்லறை சந்தையில் நேரடியாக நுழைவதற்குப் பதிலாக, அவர் ஒரு வித்தியாசமான சந்தைப்படுத்தல் உத்தியைக் கையாண்டு, மருத்துவக் கடைகள் மூலம் தனது ஹேர் ஆயிலை விற்கத் தொடங்கினார்.
இந்த யோசனை அவரை கைவிடவில்லை, மருத்துவக் கடைகளில், கேஷ் கிங் சாதாரண ஹேர் ஆயிலுக்குப் பதிலாக மருந்தாக விற்பனையானது. லாபம் ஈட்டிய பிறகு, அவர் குறைந்த விலையில் சில்லறை வர்த்தகத்தில் நுழைந்து அதில் சாதித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |