சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்த போது சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த்! என்ன சொன்னார் தெரியுமா? கடும் கோபத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து போது பேசிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின், இரண்டாம் பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சஞ்சு சாம்சன் 57 பந்தில் 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவர் எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த போது, தமிழில் வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் சஞ்சு என் கு** என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
All of my brothers and nephews watch the IPL matches in tamil commentary only. There these Elite Mylapore Castiest pigs are casually bodyshaming all the players. Srikanth went on to say 'Sanju My dick' on live air. @IamSanjuSamson @StarSportsIndia #BanStarSportsTamil
— Cole (@prbhk) September 27, 2021
இதைக் கண்ட ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வெளிப்படையாக மீடியாவில் எப்படி இப்படி உங்களால் பேச முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அதே சமயம் மலையாளத்தில், குஞ்சு என்பது, சின்ன குழந்தை என்ற பொருளில் அழைக்கப்படும் வார்த்தை.
சஞ்சு சாம்சன், கேரளாவைச் சேர்ந்தவர். எனவே, ஸ்ரீகாந்த் டைமிங்காக அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.