249 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி: சஞ்சு, இஷான் ருத்ரதாண்டவம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா 249 ஓட்டங்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.
சிதறடித்த கூட்டணி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்தியா முதலில் துடுப்பாடியது. அபிஷேக் ஷர்மா 20 ஓட்டங்களில் வெளியேற, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் கூட்டணி மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சிதறடித்தது.
இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ரஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
249 ஓட்டங்கள் குவித்த இந்தியா
அடுத்து வந்த ஷிவம் தூபே 7 ஓட்டங்களில் சேஸின் பந்துவீச்சில் போல்டானார். அணியின் ஸ்கோர் 162 ஓட்டங்களாக உயர, சஞ்சு சாம்சன் (Sanju Samson) 82 ஓட்டங்களில் (4 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) அவுட் ஆனார்.
பின்னர் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் 18 பந்துகளில் 40 ஓட்டங்களும், திலக் வர்மா 18 பந்துகளில் 44 ஓட்டங்களும் விளாச இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகளின் தரப்பில் ரஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளும், ஷாமர் ஸ்ப்ரிங்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
