தோனி களத்தில் இருந்தாலே அது எதிரணிக்கு ஆபத்தான விடயம் - நேர்காணலில் கூறிய சஞ்சு சாம்சன்
தோனி களத்தில் இருந்தாலே அது எதிரணிக்கு ஆபத்தான விஷயம் என்று ராஜஸ்தான் ராயல்சுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் முதலில் துப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சென்னை அணி களத்தில் இறங்கியது.
இப்போட்டியின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ஓட்டங்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் பேட்டி
இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்,
"சேப்பாக்கம் மைதானத்தில் நிறைய போட்டிகள் நடந்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் நான் வென்றது கிடையாது. ஆனால் இப்போட்டியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
சென்னையுடனான போட்டியில் கடைசி 2 ஓவர்கள் மிகவும் பதற்றத்தை கொடுத்தது. தோனி களத்தில் இருந்தாலே அது எதிரணிக்கு ஆபத்தான விஷயமாக இருக்கும்.
தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் பெரும்பாலும் பயன் கொடுக்காது. அவரை வெல்வது மிகவும் கடினம். தோனிக்கு எதிராக எதுவும் வேலையாகாது. தோனி மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.