முதல் சர்வதேச சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முதல் சதத்தினை பதிவு செய்தார்.
போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 296 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசினார்.
Getty Images
16வது ஒருநாள் போட்டியில் விளையாடும் சாம்சனுக்கு இது முதல் சர்வதேச சதம் ஆகும். அவருக்கு அடுத்தபடியாக திலக் வர்மா (Tilak Varma) 77 பந்துகளில் 52 ஓட்டங்களும், ரிங்கு சிங் (Rinku Singh) 38 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளும், நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@Cricbuzz (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |