பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய சாம்சனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா? அவர் கூறிய விடயம்
பல வெற்றி, தோல்விகளுக்கு பிறகு நான் இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோல்வியடைந்த நிலையில் சஞ்சு சாம்சன் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்தார்.
ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் களமிறங்கிய சாம்சன் சொதப்பினார். தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு நாளையப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
சஞ்சு சாம்சன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''எனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஒரு சிறந்த முறையில் தயாராகி, அனுபவப்பட்டு வந்திருப்பது இந்த உலகக்கிண்ண தொடருக்கு மட்டும் தான். பல வெற்றி தோல்விகளுக்கு பிறகு நான் இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையும், கிரிக்கெட்டும் எனக்கு பல விடயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதோடு தான் இந்த முக்கியமான தொடருக்கு நான் வந்திருக்கிறேன். ஐபிஎல் தொடர் ஒன்றே என்னுடைய மனதளவில் ஆக்கிரமித்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எல்லாம் எனக்கு கற்றுத் தந்தது.
அணி நிர்வாகத்திற்கு என்ன தேவையோ, அணியில் எந்தெந்த வீரர்கள் எந்த காம்பினேஷனில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்து தான் இடம் கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை நான் சரியான முறையில் தயாராக இருக்கிறேன். கிரிக்கெட்டும், வாழ்க்கையும் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |