இந்திய அணியில் புறக்கணிப்பு..கேப்டன் பதவி கொடுத்து அழைத்த பிரித்தானிய நாடு..வேண்டாம் என மறுத்த வீரர்
அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டிற்காக விளையாட விடுத்த கோரிக்கையை இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் புறக்கணிப்பு
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆசியக் கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. பலர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்தனர்.
அயர்லாந்தின் வாய்ப்பை மறுத்த சாம்சன்
இந்த நிலையில் கேரள பத்திரிகையான மலையாள மனோரமாவின் அறிக்கையின்படி, சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, தங்கள் நாட்டு அணிக்காக அவர் விளையாட வேண்டும் என்றும், அணியின் கேப்டனாக அவர் செயல்படலாம் என்றும் கூறியுள்ளது. ஆனால், சஞ்சு சாம்சன் தனது நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்றும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர், பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் பதில் அளித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாக 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
@IPL