இலங்கை வீரரின் பந்துவீச்சில் அவுட் ஆன சாம்சன்.. முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!
சஞ்சு சாம்சன் தனது திறமையை வீணடிக்கிறார் என்றும், ஹசரங்காவின் பந்துவீச்சில் அவர் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் இயான் பிஷப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசி சிறப்பாக தனது ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், மோசமான ஷாட் ஆட முயன்று ஹசரங்காவின் பந்துவீச்சில் போல்டானார்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'நான் சாம்சனின் தீவிர ரசிகன். சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் தவறான ஷாட்களை அவர் தெரிவு செய்கிறார். அதிகமாக ஓட்டங்கள் சேர்த்து சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அவர் தனது திறமையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய போட்டியில் ஹசரங்கா பந்து வீச்சில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். அவர் சாட் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.