அவங்களுக்கு மனவுறுதி வேண்டும்! எது வேணா நடக்கலாம்... ஆர்.சி.பி அணியிடம் உதைபட்ட கடுப்பில் பேசிய ராஜ்ஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்
ஐபிஎல் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்த பின்னர் அது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
ஐபிஎல் 14ஆவது சீசன் 43ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. ஓபனர்கள் நல்லமுறையில் விளையாடினார்கள். ஆனால், அதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை.
மிடில் வரிசை வீரர்களுக்கு இன்னும் அதிகமான மனவுறுதி வேண்டும் என நினைக்கிறேன். இந்த வாரம் எங்களுக்கு சிறப்பானதாக இல்லை. மைதானம் வேகம் குறைந்த பந்துகளுக்கு சாதகமாக இருந்தது. பௌலர்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
களத்தில் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்ற சுதந்திரம் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி, தோல்வியை பார்க்காமல் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்தாலே போதும். கடைசி போட்டிவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியுள்ளார்.