இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் சஞ்சு சாம்சன் வெளியிட்ட புகைப்படங்கள்! குவியும் ஆதரவு
இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் தான் அணியில் தேர்வாகததால், விரக்தியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, வரும் 17-ஆம் திகதி நியூசிலாந்துடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சுசாம்சன் இந்த அணியில் இல்லை. இதனால் டுவிட்டரில் இணையவாசிகள் அவருக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் சஞ்சுசாம்சன் விரக்தியில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில். தான் அற்புதமாக பீல்டிங் செய்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
— Sanju Samson (@IamSanjuSamson) November 10, 2021
இந்த நேரத்தில் ஏன் இவர் இந்த புகைப்படங்களை பகிர வேண்டும், பிசிசிஐக்கு மறைமுகமாக தன்னைப் பற்றி கூறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இதே போன்று தான் அம்பத்தி ராயுடு தனக்கு அணியில் இடம் கிடைக்காத போது, அவருக்கு பதிலாக விஜய்சங்கர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை விமர்சித்திருந்தார்.
அதன் பின் அம்பத்தி ராயுடு அணியில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது.
தற்போது சஞ்சுசாம்சனும் இப்படி பதிவிட்டுள்ளது எங்கு முடியப் போகிறது என்பது போக போக தான் தெரியும்.