வெளிநாடொன்றில் ரஜினி படம் பார்க்க ரிஸ்க் எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்
ரஜினி படம் பார்க்க ரிஸ்க் எடுத்து சென்றதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக உள்ளார்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி, CSK அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சமீபத்தில், முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் Kutty stories with Ash என்ற பாட்காஸ்டில் கலந்து கொண்டு கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விடயங்களை பேசினார்.
கூலி படம் தொடர்பான விவாதம் வந்த போது சஞ்சு சாம்சன் தான் ஒரு ரஜினி ரசிகர் என கூறினார். அப்படியானால், போஸ்டர்களுக்கு பால் ஊற்றுவது போன்ற செயல்களை செய்துள்ளீர்களா என அஸ்வின் கேள்வி எழுப்பினார்.
ஜெயிலர் படம்
அதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், "அப்படி செய்ததில்லை. ஆனால், 2023 ஆம் ஆண்டு அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த போது, நாளை மறுநாள் போட்டி இருந்தது. நான் போட்டிக்கு தயாராக வேண்டும்.
ஆனால், நாளை ரஜினி சாரின் ஜெயிலர் படம் வெளியாக இருந்தது. அப்போது நான் தனியாக வெளியே சென்று, திரையரங்குகளை தேடிக்கண்டுபிடித்து, டிக்கெட் எடுத்து தனியாக ரஜினி படம் பார்த்து விட்டு வந்தேன்.
இவ்வளவு ரிஸ்க் எடுத்து படம் பார்த்தேன். நானும் தீவிர ரஜினி ரசிகன் தான் என பேசினார்.
கூலி படம் பார்ப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, "முடிந்தால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்" என கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |