வருடத்தில் 6 நாட்கள் மட்டுமே சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி: எங்கு தெரியுமா?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்றாக அமைந்திருப்பது இந்து கோவிலின் தனிச்சிறப்பு.
பொதுவாக சங்கரநாராயணர் கோவிலில் முன்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் சிவலிங்கத்தின் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபங்களை காண முடியும்.
ஆனால் வருடத்தில் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் 21, 22, 23 இந்த மூன்று நாட்கள் மட்டுமே சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும்.
இதுபோன்று நேரடியாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது வெகு சில கோவில்களை மட்டுமே நடைபெறும்.
வருடத்தில் வரும் பிரத்யோகமான இந்த ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் அளவிற்கு தொழில்நுட்பத்தோடு கோயிலை அமைத்தார் மன்னர் உக்கிர பாண்டியன்.
இந்த ஆறு நாட்களில் தவறாமல் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயணன் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |