சனி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம்! நற்பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
2022 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் திகதி சனிக்கிழமை நிகழ்கிறது. இந்நாளில் சனி அமாவாசை யோகமும் உருவாகிறது.
அமாவாசை திதி சனிக்கிழமைகளில் வந்தால், அது சனி அமாவாசை ஆகும்.
ஜோதிடத்தின் பார்வையில், சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் நிகழ்வது மிகவும் மங்களகரமானதாகும். இந்த சனி அமாவாசை சூரிய கிரகண சேர்க்கை 12 ராசிகளையும் பாதிக்கும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் கிடைத்தாலும், சிலருக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
சனி அமாவாசை சூரிய கிரகண சேர்க்கையால் நற்பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
மிதுனம்
சனி அமாவாசை சூரிய கிரகண சேர்க்கையானது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒரு புதிய வேலையைத் தொடங்கும் எண்ணம் மனதில் தோன்றலாம் மற்றும் இது உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
நிதி நிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மிதுன ராசியின் அதிபதி புதன். சூரியனுக்கும் புதனுக்கும் நட்பு இருப்பதால், இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நற்பலன்களை வழங்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு கிடைக்கலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தனுசு ராசியின் அதிபதி குரு. ஜோதிடத்தின் படி, குரு மற்றும் சூரியனுக்கு இடையே நட்புறவு உள்ளது. ஆகவே இந்த கிரகணம் நிச்சயம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
கடகம்
சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகண சேர்க்கை கடக ராசிக்கரர்களுக்கு நேர்மறையான பலன்களைத் தரும். அதுவும் இந்த கிரகணத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.
தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். முதலீடு செய்வதற்கு நல்ல காலம். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.