நயன் - விக்கி குழந்தைகளுக்கு தாய்மாமன் இந்த நடிகர் தானாம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் முடிந்து சரியாக 3 மாதத்தில் வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள்.
இந்த நிலையில் சமீப தினங்களுக்கு முன்னர் நடிகர் சந்தானம் அவர்கள் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது அவரின் சினிமா வாழ்க்கையில் நடந்த காரசாரமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் நயன் குறித்து கேட்கும் போது,“ சமீபத்தில் ஒரு படத்திற்காக விக்னேஷ்சிவனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். அப்போது குழந்தைகளிடம் என்னை காட்டி “மாமா பாரு..” என நயன் கூறினார்.
நான்,“ அப்போ என் மடியில் ஒட்கார வைத்து காது குத்துவீர்களா?” என கேட்டேன்..
சினிமா வாழ்க்கையில் ஒரு தங்கச்சி என்றால் அது நயன்தாரா தான்..” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.