2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் திகதி நிகழவுள்ளது. மே மாதத்தில் நிகழும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இதன் படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் திகதி விருச்சிக ராசியில் நிகழப்போகிறது.
இப்போது 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கடன் வாங்குவதில் இருந்து சற்று விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் அதிக உற்சாகமும் பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். இந்நாளில் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இந்நாளன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சந்திர கிரகண நாளில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பண விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பயணம் மற்றும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! சந்திர கிரகண நாளன்று உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். பணம் அதிகம் செலவாகும் வாய்ப்புள்ளது. வரவுக்கு மீறிய செலவு காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மன அழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்நாளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். சண்டைக்கான சூழ்நிலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகண நாளன்று ஒருவித பயம் மனதில் இருக்கும். உங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருங்கள். பணியிடத்தில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்நாளில் சற்று கவனமாக இருங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! அதிகளவிலான உற்சாகம் தீங்கை உண்டாக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் மூத்த உடன்பிறப்புகளுடனான உறவு பாதிக்கப்படலாம். எதிலும் பேசி வெல்ல முயற்சித்து தோல்வியடையாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழலாம். இந்நாளில் புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த நாளில் பணம், ஆரோக்கியம், உறவுமுறைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு செய்யாதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள். இந்நாளில் தோல்விகளை காணலாம்.உங்களின் இமேஜ் பாழாகலாம். எனவே உங்கள் நடத்தையில் சிறப்பான கவனத்தை செலுத்துங்கள். இந்நாளில் உங்கள் தாயின் ஆசி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. எனவே சந்திர கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் அவசரப்படாதீர்கள். ஒவ்வொரு பணியையும் பொறுமையுடன் செய்யுங்கள். உங்கள் பதற்றம் அதிகரிக்கும். இதனால் தலைவலியும் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். சுத்தத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வருமான ஆதாரங்களை உருவாக்குவது சற்று கடினமாக இருக்கலாம். பொறுமையாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! சந்திர கிரகண நாளன்று மன உளைச்சல் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். ஈகோ கொள்ளாமல் இருங்கள். மற்றவர்களுக்கு உதவினால் நன்மை கிடைக்கும். நல்ல மனநிலையைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022