உடலை வில்லாக வளைத்து கேட்ச் பிடித்த வீரர்! மிரண்டுபோய் நின்ற பேர்ஸ்டோவின் வீடியோ
இங்கிலாந்து அணி வீரரின் கேட்சை நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் சான்ட்னர் உயர எகிறி பிடித்தது பார்வையாளர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.
போல்ட் அபார பந்துவீச்சு
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்து வருகிறது.
மழை காரணமாக தொடக்கத்தில் ஆட்டம் தடைப்பட்டதால், 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. மூன்றாவது ஓவரை போல்ட் வீசியபோது பேர்ஸ்டோவ்வின் பேட்டில் எட்ஜ் ஆகி சென்றது.
Some catch ?
— England Cricket (@englandcricket) September 10, 2023
Jonny Bairstow is forced to depart early...#EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/hrB15EWVgt
சான்ட்னர் மாயாஜால கேட்ச்
அப்போது கவர் திசையில் நின்றிருந்த சான்ட்னர் உடலை வளைத்து, தாவி மிரட்டலாக கேட்ச் செய்தார். இதனால் பேர்ஸ்டோவ் மிரண்டு போய் நின்றார்.
இந்த அபார கேட்ச் ரசிகர்களையும் ஆர்ப்பரிக்க செய்தது. இதுதொடர்பான வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |