இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்
Sri lanka allout for 446 vs pakistan: பாகிஸ்தானின் சாகிப் கான் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ராவல்பிண்டியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சாகிப் கான் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கை அணி 446
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
நான்காம் நாளான இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி 446 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சாகிப் கான்
இதன்மூலம் 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. தனஞ்செய டி சில்வா 167 ஓட்டங்களும், குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களும் எடுத்தனர். கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சாகிப் கான் (Saqib Khan) தனது அறிமுக டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளும், ரஸவுல்லா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
