சச்சினை மோசமான வார்த்தைகளை திட்டினேன்! ஆனால் அவர்..கனடா சம்பவம் குறித்து மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கனடாவில் நடந்த ஒருநாள் தொடரில் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது.
அப்போது சிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக், போட்டியின்போது சச்சின் டெண்டுல்கரை மோசமாக திட்டியதாக கூறியுள்ளார்.
@Agence France-Presse
சக்லைன் முஸ்தாக்
அந்த சம்பவம் குறித்த அனுபவத்தை அவர் கூறுகையில், 'எனக்கு சச்சின் உடன் ஒரு சம்பவம் நடந்தது மறக்க முடியாதது. நாங்கள் கனடாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்றோம். நான் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி விட்டு, அதே திமிருடன் நான் பந்துவீச வந்து இருந்தேன். சச்சின் ஒரு புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர்.
நான் முதலில் பந்துவீசும்போது அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்பட்டேன். பிறகு அவரை தகாத வார்த்தையில் திட்டினேன். ஆனால், அவர் என் அருகில் வந்து சில வார்த்தைகளை கூறினார்.
Getty Images
சக்கி நீ இப்படி செய்வாய் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன்னை பார்ப்பதற்கு அவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆள் மாதிரி தெரியவில்லை. நான் உன்னை ஒழுக்கமான நபர் என்று நினைத்தேன். ஆனால் நீ இப்படி செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் கூறிய வார்த்தைகள் என்னை தாக்கியது. தவறு செய்துவிட்டோமே என்ற மனவருத்தத்திலேயே நான் பந்துவீசினேன். அவரோ பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில் எனக்கு தெரிந்தது அவர் தன் யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார் என்று.
அதாவது, ஒருவரைப் பற்றி நாம் நல்ல கருத்துக்களை கூறிவிட்டால், நாம் அதைப் பற்றி சிந்திப்போம். அவருக்கு எதிராக நாம் ஆக்ரோஷமாக விளையாட மாட்டோம். சச்சின் இதைத் தான் பயன்படுத்தினார்.
File
நான் சச்சின் மீது மரியாதை செலுத்த தொடங்கி விட்டதால், அவர் பவுண்டரிகளாக அடித்து ஓட்டங்களை சேர்த்தார். போட்டி முடிந்தவுடன் மாலையில் நான் சச்சினை சந்தித்து, துடுப்பாட்டத்திலும் மட்டுமில்லாமல் வார்த்தையிலும் நீங்கள் புத்திசாலியான வீரர் என்று பாராட்டினேன். அதற்கு அவர் சிரித்தார்' என தெரிவித்துள்ளார்.
சக்லைன் முஸ்தாக் ஒருநாள் போட்டிகளில் 208 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 288 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.