'தெய்வ திருமகள்' சாரா கதாநாயகி ஆனார்!
'தெய்வ திருமகள்' பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா கதாநாயகியானார்.
'தெய்வ திருமகள்' சாரா
கடந்த 2011ம் ஆண்டு நடிகர் விக்ரம், நடிகைகள் அனுஷ்கா, அமலாபால் நடிப்பில் வெளியான படம் ‘தெய்வ திருமகள்’.
இப்படம் மகள், தந்தையின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் விக்ரமிற்கு சின்ன வயது மகளாக ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சாரா.
இதன் பின்பு சாரா மீண்டும் விஜய் இயக்கத்தில் ‘சைவம்’ என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் இளவயது நந்தியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவருடைய அழகு ரசிகர்களை ரசிக்கும்படியாக இருந்தது. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாரா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் விஜய் பேட்டி ஒன்றில் பேசுகையில்,
‘தெய்வ திருமகள்’ படத்தின் நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய சாராவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்.
அவர் ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் சாரா தெய்வீக அழகுடன் காண்பித்துவிட்டார். இதனால், தைரியமாக கதாநாயகியாக சாரா நடிக்கலாம் என்றார்.
Of all pains, the greatest pain is to think of love failure.
— Tentkotta (@Tentkotta) June 23, 2023
Watch #Nandhini's ? Heart Breaking love tale on #PS2 #PS2onTentkotta?️#ManiRatnam @arrahman #AishwaryaRaiBachchan #ChiyaanVikram #SaraArjun #PS2blockbuster pic.twitter.com/BY1hnyOJ5Z
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |