பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்... பாகிஸ்தானில் கொத்தாக கைதான உறவினர்கள்
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி சாராவின் உறவினர்கள் இருவரை விசாரணையின் பொருட்டு பாகிஸ்தான் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற
சிறுமி சாராவின் தந்தை 41 வயது உர்ஃபான் ஷெரீப், மற்றும் அவரது காதலி 29 வயது பெய்னாஷ் பதூல் ஆகிய இருவரும், பிரித்தானியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.
கடந்த ஆகஸ்டு 10ம் திகதி Woking பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சிறுமி சாராவின் சடலம் மீட்கப்பட்ட நிலையிலேயே, தந்தையும் உறவினர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்தது.
உடற்கூறு ஆய்வில் சிறுமி சாரா பல காலமாக துன்புறுத்தலுக்கு இரையாகி வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ஜெஹ்லம் பகுதியை சேர்ந்த பொலிசார் தெரிவிக்கையில்,
ஷெரீப் மற்றும் அவரது தற்போதைய துணைவி பதூல் ஆகிய இருவரும் தற்போதும் தலைமறைவாக உள்ளனர் எனவும், ஆனால் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் விசாரணைக்காக கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒத்துழைக்க தயார்
கைது செய்யப்பட்டவர்களில் உர்பானின் தந்தை முகமது ஷெரீப், அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் அடங்குவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். புதன்கிழமை, சிறுமி சாராவின் சித்தி முதல் முறையாக இந்த விவகாரம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
Picture: Uwaga
அதில், சிறுமி சாராவின் மரணம் வெறும் ஒரு விபத்து என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாமும் கணவர் ஷெரீபும் பிரித்தானிய அதிகாரிகளுடன் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாராவின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் ஷெரீப் மற்றும் பதூல் ஆகிய இருவரிடம் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானிய பொலிசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |