பிரித்தானியாவில் வீட்டில் இறந்துகிடந்த சிறுமி வழக்கு: சரணடைய முடிவு செய்துள்ள தந்தை சித்தி முதலானோர்
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பொலிசில் சரணடைய சிறுமியின் தந்தை, சித்தி மற்றும் சித்தப்பா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
சரணடைய முடிவு
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.
BNN Breaking
சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif, 41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool, 29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik, 28) ஆகியோர், தம்பதியரின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், சாராவின் தந்தை, சித்தி பட்டூல் மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் ஆகியோர் பொலிசில் சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரணடையும் முடிவுக்கு என்ன காரணம்?
இப்படி திடீரென அவர்கள் சரணடைய முடிவு செய்துள்ளதற்கு என்ன காரணம். பாகிஸ்தானைப் பொருத்தவரை, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்களாம்.
ஷெரீஃப் குடும்பத்தினரைப் பிடிக்க பிரித்தானிய பொலிசார் வேறு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, ஷெரீஃபின் உறவினர்கள் 10 பேர் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்களாம்.
மேலும், நீதிமன்றம் தலையிட முடியாத வகையில் ஷெரீஃபின் உறவினர்கள் பலர் பல்வேறு இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்களாம்.
பாகிஸ்தான் பொலிசார், சித்திரவதை, என்கவுண்டர் ஆகிய விடயங்களில் மோசமான பெயர் வாங்கியவர்கள். அடுத்ததாக ஷெரீஃப் குடும்ப பெண்களை விசாரிக்க இருப்பதாக பொலிசார் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே, தற்போது ஷெரீஃப் குடும்பத்தினர் சரணடைய முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட கோரிக்கை
பாகிஸ்தான் பொலிசாரிடம் சிக்கினால் தங்களுக்கு ஆபத்து என்பதால் பிரித்தானிய அதிகாரிகளிடம் தங்களை ஒப்படைக்க கோரி, சரணடைய முன்வந்துள்ளார்கள் ஷெரீஃப் குடும்பத்தினர்.
அரசியல்வாதிகள் மற்றும் பெரும் புள்ளிகள் சிலர் தலையீட்டுடன், ஷெரீஃப் பாகிஸ்தான் பொலிசில் சரணடையவும், உடனடியாக பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவும் வழிவகை செய்யும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |