லண்டனில் மர்மமான முறையில் இளம்பெண் மாயமான வழக்கு... பிரேத பரிசோதனையில் முக்கிய தகவல் வெளியானது 53 minutes ago
லண்டனில் மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் மாயமான வழக்கில், பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Sarah Everard என்ற பெண்ணைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் Wayne Couzens(48) என்ற பொலிசார் கைது செய்யப்பட்டார்.
கிடைத்த உடல் பாகங்கள் Sarahவுடையதுதான் என பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதையடுத்து, Wayne மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவலில் அடைக்கப்பட்டிருந்த Wayne சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அது தற்கொலை முயற்சியா என்பது குறித்து பேசுவதற்கில்லை என பொலிஸ் அதிகாரிகள் கூறிவிட்டார்கள். இந்நிலையில், மீண்டும் தலையில் புதிய காயங்களுடன் அவர் நேற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, இன்று Wayne நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில் Sarah கொல்லப்பட்ட வழக்கு, பிரித்தானியாவில் பல வித விவாதங்களை உருவாக்கியுள்ளது.
ஒரு பக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விவாதமும், மறுபக்கம், ஒரு Wayne இப்படி மோசமாக நடந்துகொண்டதால், அத்தனை ஆண்களையும் குற்றம் சொல்வது நமது சகோதரர்கள் பிள்ளைகளை குறை சொல்வதுபோல் ஆகிவிடும் என்றும் பிரித்தானியா முழுவதும் விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.


