இளவரசர் ஆண்ட்ரூ மனைவியின் முன்னாள் காதலர் மரணம்: சொத்து கிடைக்குமா?
இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனுக்கு, அவரது முன்னாள் காதலர் ஒருவர் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
சாராவின் முன்னாள் காதலர்
சாரா, ஆண்ட்ரூவை திருமணம் செய்யும் முன் கோடீஸ்வரரான பாடி மெக்நாலி (Paddy McNally) என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்துவந்துள்ளார்.

அவர் புரபோஸ் செய்வார் என சாரா காத்திருக்க, பாடி புரபோஸ் செய்யாததால் தன் காதல் கனவுகள் சிதைய, ஆண்ட்ரூவை திருமணம் செய்துள்ளார் சாரா.

ஆனாலும், 40 ஆண்டுகளாக இருவருக்கும் நட்பு தொடர்ந்துள்ளது. தனக்கு விவாகரத்தானபோது கூட பாடியை சந்தித்துள்ளார் சாரா.
இந்நிலையில், சமீபத்தில் பிரித்தானியாவை விட்டு சாரா வெளியேறிய போதும், சுவிட்சர்லாந்தின் Verbier கிராமத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் சாராவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் பாடி.
விடயம் என்னவென்றால், 88 வயதாகும் பாடி, கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இந்நிலையில், இந்த வாரம் அவர் உயிரிழந்துவிட்டார்.
சொத்து கிடைக்குமா?
கடந்த ஆண்டு நிலவரப்படி, பாடி பிரித்தானியாவின் 240ஆவது பெரிய பணக்காரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு, 600 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

ஆக, இதுவரை பல ஆண்டுகளாக தேவைப்படும்போதெல்லாம் சாராவுக்கு பாடி அள்ளி வழங்கி வந்த நிலையில், இப்போதும் அவரது சொத்தில் ஒரு பங்கு சாராவுக்குக் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |