செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கப்போகும் இளவரசர் தம்பதி
பல நாட்டுத் தலைவர்கள் மன்னர் சார்லசைக் காண வருகிறார்கள், மன்னரும் ராணி கமீலாவும் அவர்களுக்கு விருந்தளிக்கிறார்கள், இளவரசர் வில்லியமும் கேட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புன்னகையுடன் மக்களைப் பார்த்து கையசைக்கிறார்கள், கைகுலுக்குகிறார்கள்.
ஆக, வெளியிலிருந்து பார்க்க, ராஜ குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதுபோல் தோன்றினாலும், குடும்பத்துக்குள் சில பிரச்சினைகள் புகைந்துகொண்டுதான் இருக்கின்றன.
ராஜ குடும்பத்துக்கு தலைவலியாகிவிட்ட தம்பதி
குறிப்பாக, மன்னருடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும், அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும் ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார்கள்.
Getty
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கி, பாலியல் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்ட அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் ஆண்ட்ரூ தொடர்பிலிருந்தது தெரியவந்தது.
எப்ஸ்டீனுடைய மாளிகையில், பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியாக ஆண்ட்ரூ உறவு வைத்துக்கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்ட, பின் அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள, இந்த விடயம் வெளியே தெரியவர, ராஜ குடும்பம் தலைகுனிய நேர்ந்தது.
அந்த பிரச்சினை இன்னமும் முடியாத நிலையில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாராவும் அந்த மோசமான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததும், அவர் சிறையிலிருந்து விடுதலையானதைக் கொண்டாட தன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றதும் சமீபத்தில் தெரியவர, மீண்டும் ராஜ குடும்பத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டது.
Getty
சமீபத்தில் கூட மன்னரை நேருக்கு நேர் பார்த்து அவமதிக்கும் வகையில் பேசினார் ஒரு நபர்.
மன்னர் நடவடிக்கை
இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும், ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் Royal Lodge என அழைக்கப்படும் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான, 30 அறைகள் கொண்ட மாளிகையில் தங்கியிருக்கிறார்கள்.
ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த ஆண்ட்ரூவும் சாராவும் Royal Lodgeஇல் வாழ்வதற்கு எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்ற மன்னர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Doug Seeburg
ஆண்ட்ரூவுக்கு, முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் வாழ்ந்த Frogmore Cottage மாளிகை கொடுக்கப்படலாம் என்றும், சாராவுக்கு, தற்போது இளவரசர் வில்லியமும் கேட்டும் வாழும் Adelaide Cottage கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கணவனுடன் வாழும்போதே வேறொரு நபருடன் தொடர்பிலிருந்த சாராவும், ஆண்ட்ரூவும், விவாகரத்து செய்தபின்னரும் Royal Lodgeஇல் சேர்ந்து தங்கி வாழ்ந்துவந்தார்கள்.
இப்போது இருவரும் பிரிந்து வெவ்வேறு வீடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

Alamy
ஏற்கனவே பல தொண்டு நிறுவனங்கள் சாராவுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள, சாரா, தான் தனித்து விடப்பட்டுள்ளதாக உணர்வதாகவும், தனக்கு வாழ இடம் எதுவும் இல்லை என தனக்கு தெரிந்தவர்களிடம் புலம்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆக, செய்த தவறுகளுக்கான தண்டனையை ஆண்ட்ரூவும் சாராவும் அனுபவிக்கும் காலம் துவங்கிவிட்டாற்போல் தோன்றுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |