தலைமறைவாக இருந்த இளவரசர் ஆண்ட்ரூ மனைவி மீண்டும் பிரித்தானியாவில்...
Sarah Ferguson's return to Britain has seemingly sparked fresh anxiety in Buckingham Palace: இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவி மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம், அரண்மனையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால் ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது.

அந்த செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாகிய சாரா ஃபெர்குசன், தன் மகள்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீனை காணச் சென்ற விடயம் குறித்த செய்திகள் வெளியாக, ராஜ குடும்பம் அதிர்ச்சிக்குள்ளானது.
தலைமறைவு
எப்ஸ்டீன் தொடர்பில் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு பிரச்சினை பெரிதாக, சாராவோ மாயமானார்.

அவர் எங்கிருக்கிறார் என்பதே பல மாதங்களாக தெரியவராத நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு, சாரா ஆஸ்திரியா நாட்டிலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் இருப்பது தெரியவந்தது.
மீண்டும் பிரித்தானியாவில்...
இந்நிலையில், மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள சாரா, புதிய வீடொன்றில் குடியேறியுள்ளார்.
அது மட்டுமின்றி, சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனியுடன் பங்கேற்றுள்ளார் சாரா.

இதற்கிடையில், சாரா புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகவே, அவரால் புதிதாக என்னென்ன பிரச்சினைகள் உருவாகப்போகின்றனவோ என பக்கிங்காம் அரண்மனையில் பதற்றம் உருவாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.