இளவரசரின் திருமண வாழ்க்கையைக் கெடுத்த மனைவியின் மோசமான செயல்
எல்லோரையும்போல இளவரசர் ஆண்ட்ரூவின் திருமண வாழ்க்கையும் நன்றகாத்தான் போய்க்கொண்டிருந்தது.
ஆனால், அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியான சாரா ஃபெர்குசன் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்த விடயத்தை ஊடகங்கள்தான் போட்டு உடைத்தன. அதோடு அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
திருமண வாழ்க்கையைக் கெடுத்த மனைவியின் மோசமான செயல்
1986ஆம் ஆண்டு மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் சாரா ஃபெர்குசனுக்கும் திருமணம் நடைபெற்றது.
இளவரசர் ஆண்ட்ரூ, கடற்படையில் பணியாற்றிவந்தார். சிறுவயது முதலே தனக்கு அறிமுகமான ஆண்ட்ரூவுடன் அரண்மனையில் மகிழ்ச்சியாக வாழும் ஆசையில் அவரை திருமணம் செய்துகொண்ட சாராவுக்கு, ஒரு ஏமாற்றம் காத்திருந்தது.
காரணம், ஆண்ட்ரூ கடற்படையில் பணியாற்றியதால், ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே அவரால் சாராவுடன் செலவிட முடிந்தது.
அந்த விடயம் சாராவுக்கு ஏமாற்றத்தை அளிக்க, தம்பதியரின் முதல் மகளான இளவரசி பீட்ரைசை கருவில் சுமக்கும்போது எட்டு மாதங்கள் கணவன் அருகில் இல்லாமல் தனியாக செலவிட நேர, சாராவுக்கு கோபமும் வந்தது.
அப்போதுதான் அமெரிக்க கோடீஸ்வரரான ஸ்டீவ் (Steve Wyatt) என்பவரை சந்தித்தார் சாரா.
திருமணமாகி மூன்றே ஆண்டுகள் ஆனநிலையில், தங்கள் இரண்டாவது மகளான யூஜீனியை கருவில் சுமக்கும்போது ஸ்டீவை சந்தித்த சாரா அவரிடம் மனதை பறிகொடுத்தார்.
இருவரும் நெருங்கிப் பழக, ’ஆண்ட்ரூ என் நண்பர்தான், ஆனால், என் இதயம் நிறைந்த காதலர் என்றால் அது ஸ்டீவ்தான் என சாரா கூறியதாக தெரிவிக்கும், சாராவின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய எழுத்தாளரான டேவிட் (David Leigh), சாரா ஆண்ட்ரூ திருமணம் உடைய ஸ்டீவ்தான் காரணம் என்கிறார்.
சாரா ஸ்டீவை உருகி உருகிக் காதலித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் கிடைத்தது. ஆம், ஸ்டீவுக்கு கேட் (Cate Magennis) என்னும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தகவல் கிடைக்க மனம் உடைந்துபோனார் சாரா.
அதற்குப் பிறகு, 1992ஆம் ஆண்டு, டெய்லி மிரர் பத்திரிகையில் சில புகைப்படங்கள் வெளியாகின. ராஜ குடும்பம் அதிர்ந்தது.
அந்த புகைப்படங்களில், ஸ்டீவின் நண்பரான ஜான் பிரையன் (John Bryan) என்பவர் சாராவின் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சாராவும் ஆண்ட்ரூவும் பிரிந்தனர்.
இந்த விடயம், ஆண்ட்ரூவின் தாயான மறைந்த மகாராணி எலிசபெத்துக்கும் அவரது தந்தையான இளவரசர் பிலிப்பும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்த, பிலிப் கடைசி வரை தன் மருமகளை மன்னிக்கவில்லை என கூறப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இவ்வளவு நடந்தும் இப்போதும் சாராவும் ஆண்ட்ரூவும் இணைந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக இல்லாத நிலையிலும் ராஜ குடும்பத்தின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் தம்பதியர் கலந்துகொள்கிறார்கள்.
ஆனால், சமீபத்தில் வந்த ஒரு தகவல் அந்த நிலைமையை மாற்றியிருக்கிறது. ஆம், ஏற்கனவே ஆண்ட்ரூவுக்கும் ஏராளம் சிறுபிள்ளைகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஆண்ட்ரூவை ராஜ குடும்பத்திலிருந்து விலக்கிவைத்தார் மகாராணியார்.
இப்போது, அதே ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் சாராவுக்கும் தொடர்பு இருப்பது அவர் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவும் சாராவும் முற்றிலும் புறக்கணிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் தொடர்புடைய பல தொண்டு நிறுவனனங்களுடன் தொடர்புடையவர் சாரா. ஆனால், அவர் குழந்தைகளை சீரழித்த எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால், பல தொண்டு நிறுவனங்கள் சாராவிடமிருந்து விலகிவருவது சாராவின் வீழ்ச்சியின் துவக்கமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |