"சுமார் 50 பொலிஸார் என்னை அச்சுறுத்தினர்" சாரா எவரார்டு விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
லண்டனில், சாரா எவரார்டு விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், தன்னை 'சுமார் 50' பொலிஸ் அதிகாரிகள் டிண்டரில் தொடர்புகொண்டு 'பயமுறுத்தியதாக' கூறிய நிலையில் பிரபரப்பு ஏற்பட்டதுள்ளது.
தெற்கு லண்டனில் கடந்த மார்ச் 3-ஆம் திகதி சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண்ணை Wayne Couzens எனும் காவல்துறை அதிகாரி, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைது செய்து, காரில் Kent-க்கு கடத்தி வந்து துஷ்பிரயோகம் செய்தார்.
பின்னர் சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து, பின் மீதமிருந்த எச்சங்களை அருகே உள்ள இடத்தில் புதைத்தார். இந்த சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச் 13-ஆம் திகதி மாலை எவரார்டுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அவர் காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள கிளாபம் காமன் பூங்காவில் (Clapham Common) விழிப்புணர்வு நடைபெற்றது.
அப்போது, COVID-19 விதிமுறைகளை மீறியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தான் பாஸ்டி ஸ்டீவன்சன் (Patsy Stevenson) வயது 28.
அவர் பொலிஸாரால் கீழே தள்ளப்பட்டு கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிறவியத்தைத் தொடர்ந்து சர்ச்சை கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் காவல்துறையின் வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பு நிலை பற்றி பரவலாக விவாதத்தைத் தூண்டியது.
இந்த நிலையில், தற்போது பாஸ்டி ஸ்டீவன்சன் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் கூறுகையில், தங்கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, பணியில் இருக்கும் சுமார் 50 மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தன்னை 'Tinder' எனும் டேட்டிங் ஆப்பில் தொடர்புகொண்டு, பயமுறுத்தியதாக கூறினார்.
தன்னிடம் Tinder-Gold upgraded வகை ஆப் இருப்பதால், தன் ப்ரொபைலை லைக் செய்தவர்களின் விவரங்களை பார்க்கமுடியும் என்று கூறினார். அவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் சீருடையில் இருப்பதாகவும், 'நான் ஒரு பொலிஸ் அதிகாரி' என்று குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
இது, தன்னை அச்சுறுத்துவதாகவும், "பாரு நாங்கள் உன்னை கவனித்துக்கொண்டே தான் இருக்கிறோம்" என்று சொல்லாமல் மிரட்டுவது போல் தெரிவதாக அவர் கூறினார்.
இதை அவர்கள் வேண்டுமென்றே செய்திருப்பது தெரிவதாகவும், நான் பயப்படுவதை அவர்கள் அறிந்துதிருப்பதாகவும் கூறியுள்ளார்.
"இப்போததெல்லாம் நான் வெளியே இருக்கும்போது அந்த பயம் எப்போதும் இருக்கிறது, யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்,' என்று அவர் கூறினார்.
மேலும், "நான் பயமின்றி வாழ விரும்புகிறேன். நான் ஒரு பெண் என்பதை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இது குறித்து மெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார்கள் வரவில்லை, ஆனால் சூழ்நிலைகள் குறித்து அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்வோம் என்று கூறியுள்ளார்.