பிரபல நடிகை சரண்யா- பொன்வண்ணன் மகள் திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்
பிரபல நடிகர் பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மூத்த மகள் பிரியதர்சினிக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
நாயகன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போதும்கூட பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார், அம்மா கதாபாத்திரம் என்றாலே சரண்யா தான் பொருத்தமாக இருப்பார் என்ற அளவுக்கு பெயர் எடுத்துள்ளார்.
இவருடைய கணவர் பொன்வண்ணன், இவரும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராவார்.
இவர்களது மூத்த மகளான பிரியதர்சினிக்கு, விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
கொரோனா காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இருவரது திருமணம் வெகு விமர்சையாக நடந்தது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நேற்று மாலையே சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் பங்கேற்று வாழ்த்தினார்.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022