கோடநாட்டில் தெருவில் நின்ற போது ஜெயலலிதாவை.., தவெக தலைவர் பேச்சுக்கு சரத்குமார் ஆவேசம்
பிரதமர் மோடியை விமர்சித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிய நிலையில் பாஜக உறுப்பினர் சரத்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் கண்டனம்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்து பல அரசியல் தலைவர் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக மாநாட்டில் பேசிய விஜய், இந்திய பிரதமர் மோடியை மிஸ்டர் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்றும் கூறினார். இதற்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, "மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களே, உங்களிடம் கேள்வி கேட்பதற்கு பல கேள்விகள் உள்ளது. கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு தாருங்கள்.
நீட் தேர்வை ரத்து செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே? தாமரையில் தண்ணீர் ஒட்டாத நிலையில் மக்கள் மட்டும் எப்படி ஓட்டுவார்கள்" என்று பேசியிருந்தார் விஜய்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பாஜக உறுப்பினர் சரத்குமார், "மோடி தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார். 12 ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட இறக்கவில்லை. திமுக தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது
பிரதமரை மிஸ்டர் என்றும், முதல்வரை அங்கிள் என்றும் கூறும் விஜய் கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்.ஜெயலலிதா என்று சொல்லியிருப்பாரா?" என்று தனது பிறந்த நாள் விழாவில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |