தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்.., அவர் சொல்லும் புது விளக்கம்
பாஜகவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இணைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், பிற கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் யாருடன் கூட்டணி போன்ற கட்சி பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன.
அண்மையில் நடிகர் சரத்குமார், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
கட்சியை பாஜகவில் இணைத்தார்
இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்தார்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், "மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன்.
வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் பாஜகவுடன் சமக கட்சியை இணைத்துள்ளேன். பாஜகவுடன் இணைந்தது சமகவின் முடிவு அல்ல, மக்கள் பணிக்கான தொடக்கம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |