மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்!

Business Saravanastores saravananarul
By Raju Apr 21, 2022 04:00 AM GMT
Report
110 Shares

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் பற்றி இன்று தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில் இவர் தனது கடை விளம்பரத்தில் தானே நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

முதலில் இவர் விளம்பரத்தில் நடிப்பதை பலரும் கேலி, கிண்டல் செய்தனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் நடித்தார். தற்போது லெஜண்ட் என்ற பெயரில் உருவாகும் தமிழ் திரைப்படத்திலும் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் விளம்பரத்தில் நடித்த பின்னர் மேலும் சரவணா ஸ்டோர்ஸ் பெயர் மக்களிடத்தில் அதிகமாக பரவியது என்று கூறினால் அது மிகையாகாது! அது அவரது வியாபாரம் அதிகமாகவும் உதவியது என்கின்றனர்.

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம்.

மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்! | Saravana Stores Saravanan Arul Life Business

இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம்.

சென்னை சென்ற புதிதில் செல்வரத்தினம் அவர்கள் செய்த தொழில், தெரு தெருவாக சென்று காபி விற்றது. நாள்பட தனது அயராத உழைப்பால் சிறிய கடை ஒன்றை துவங்கி மெல்ல, மெல்ல தொழில் வெற்றி கண்டார் செல்வரத்தினம் அவர்கள்.

தான் வியாபாரத்தில் உயர்ந்தவுடன் அவர் செய்து முதல் காரியம் தனது சகோதரர்களை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிளைகள் பல வளர்ந்தன.

மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்! | Saravana Stores Saravanan Arul Life Business

துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர் ரத்தினம் சகோதரர்கள். பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் அவர்கள் மரணமடைந்தார்.

இவர் இறந்த பிறகு, பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தது. யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ். செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும்.

இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்! | Saravana Stores Saravanan Arul Life Business

இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது. 52 வயதாகும் சரவணன் அருள் தமிழகத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களில் முக்கியமானவராக உள்ளார். லெஜண்ட் சரவணா, சரவணா செல்வரத்தினம் மற்றும் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் என்பது அவரது ஷாப்பிங் ஸ்டோர்ஸ்களின் பெயர்களாகும்.

இவரின் சொத்து மதிப்பு பல கோடிகளை தாண்டும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2018ல் 1 கோடி ரூபாயை சரவணன் அருள் வழங்கினார்.

ஜூன் 2017 இல், சரவணன் தனது மகளுக்கு சென்னை கிராண்ட் சோலா ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரூ 13 கோடி மதிப்பிலான ஆடைகளை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்! | Saravana Stores Saravanan Arul Life Business

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US