பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை! அதன் சிறப்பம்சம் தெரியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் அணிந்திருந்த புடவை கவனத்தை பெற்றுள்ளது.
பட்ஜெட் தாக்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7 -வது பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
புடவை
மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவுக்கு பல சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனை உணர்த்தும் வகையில் ஆந்திராவின் கைத்தறி பருத்தி ஜவுளிகளில் ஒன்றான மங்களகிரி சேலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இவர் அணிந்திருந்த கைத்தறி சேலை மங்கலான வெள்ளை நிறத்தில் பெரிய கட்டங்களுடனான வடிவத்தில் இருந்தது. அதோடு சேலை ஓரங்கள் வைலட் நிறத்தில் இருந்தது.
கண்ணை கவரும் வகையில் இருந்த இந்த சேலை இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை முன்னிறுத்தியதாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.
குறிப்பாக, அமைதி, நல்லிணக்கம், இந்தியக் கலாச்சாரத்தின் புதிய தொடக்கம் ஆகியவற்றை காட்டும் வகையில் வெள்ளை நிறம் இருந்தது.
இவர், கடந்த 6 பட்ஜெட் தாக்கலின் போதும் அணிந்திருந்தசேலை இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கைத்தறி பட்டு சேலைகளை உடுத்தியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |