மூன்று ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வாய்ப்பு..அணியை காப்பாற்றி சாதித்த முன்னாள் கேப்டன்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சர்ஃப்ராஸ் அகமது உதவியுடன் பாகிஸ்தான் அணி போராடி டிரா செய்தது.
டிராவில் முடிந்த போட்டி
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 449 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 408 ஓட்டங்களும் குவித்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய நியூசிலாந்து, 5 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 319 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாபிக், மிர் ஹம்சா ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 12 ஓட்டங்களிலும், கேப்டன் பாபர் அசாம் 27 ஓட்டங்களிலும் வெளியேறினர். மசூட்டை 35 ஓட்டங்களில் பிரேஸ்வெல் வெளியேற்றினார்.
A heroic ton on the final day - @SarfarazA_54 reviews his outstanding knock in the second Test ?#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/TLcul7OXI0
— Pakistan Cricket (@TheRealPCB) January 6, 2023
சர்ஃப்ராஸ் நங்கூர ஆட்டம்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நங்கூரமாக நின்று ஆடிய விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது, டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தினை பதிவு செய்தார்.
HE'S DONE IT! ?
— Pakistan Cricket (@TheRealPCB) January 6, 2023
A fourth-innings masterclass from @SarfarazA_54 as he brings up his 4️⃣th Test century ?#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/Vmbh9Ti7zR
பாகிஸ்தானின் வெற்றிக்கு 15 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாவது டெஸ்டும் டிராவில் முடிந்தது.
பாகிஸ்தான் அணியை தோல்வியில் இருந்து மீட்ட சர்ஃப்ராஸ் அகமது 118 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிராவில் முடிந்தது.
In for a thrilling finish!
— Pakistan Cricket (@TheRealPCB) January 6, 2023
4️⃣9️⃣ runs to win as @SarfarazA_54 and @SalmanAliAgha1 are at the crease ?#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/ad4VvDJPps
3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட்
மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த முன்னாள் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, இந்த தொடரில் தனது கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார்.
Player of the match ✅
— Pakistan Cricket (@TheRealPCB) January 6, 2023
Player of the series ✅
A dream run in the series for @SarfarazA_54 ?#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/gFLuRLDB1I
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய அவர், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவர் மூன்று அரை சதங்கள் (86, 53, 78), ஒரு சதம் (118) விளாசியிருக்கிறார்.
The Test series trophy is shared ?????#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/Y0KWBv1tN0
— Pakistan Cricket (@TheRealPCB) January 6, 2023