முதல் சர்வதேச சதம் விளாசிய இந்திய வீரர்! சிக்ஸர்களை பறக்கவிட்ட பண்ட் (வீடியோ)
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில், இந்திய வீரர் சர்பராஸ் கான் முதல் சதத்தை பதிவு செய்தார்.
முதல் டெஸ்ட் சதம்
பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ஓட்டங்களுக்கு சுருண்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி 402 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 (157) ஓட்டங்களும், டெவன் கான்வே 91 (105) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் 356 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ஓட்டங்களும், ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, விராட் கோலி 70 ஓட்டங்கள் குவித்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் உடன் கைகோர்த்தார்.
Lighting up your feed with the moment of the day ?
— BCCI (@BCCI) October 19, 2024
Describe Sarfaraz Khan's maiden century with an emoji ?#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/YzmhAcisgY
இருவரும் நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சர்பராஸ் கான் தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
ரிஷாப் பண்ட் அதிரடி
அதேபோல் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட் (Rishabh Pant) அரைசதம் அடித்தார். இவர்களது கூட்டணி 136 ஓட்டங்கள் குவித்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி தடைபட்டுள்ளது. இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் 12 ஓட்டங்களை எடுத்து பின் நியூசிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
The @RishabhPant17 Special Short in?#RishabhPant #INDvsNZ pic.twitter.com/qNQ22SBHnp
— Unstoppable Writer (@Unstoppablle18) October 19, 2024
சர்பராஸ் கான் (Sarfaraz Khan) 154 பந்துகளில் 3 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடித்து 125 ஓட்டங்களும், ரிஷாப் பண்ட் 56 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |