ரோகித் சர்மாவிடம் கெஞ்சிய சர்பராஸ் கான்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சுவாரஸ்யம்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இளம் வீரர் சர்பராஸ் கான் கெஞ்சும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், வாஷிங்டன் சுந்தரின் சுழல் பந்து வீச்சுக்கு முன்னால் திணறி 259 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
சுந்தர் தனது அபார பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
சர்பராஸ் கான் கெஞ்சல்
இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.
அஸ்வின் பந்தில் நியூசிலாந்து வீரர் வில் யங் கேட்ச் கொடுத்து அவுட்டான நிலையில், முகலில் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை.
More than Ravi Ashwin, this wicket goes to Sarfaraz Khan.
— Sujeet Suman (@sujeetsuman1991) October 24, 2024
Literally he was begging to Rohit Sharma to take review.pic.twitter.com/lSj15wpRT5
இதையடுத்து, ஸ்லிப்பில் நின்ற சர்பராஸ் கான் அது நிச்சயமாக கேட்ச் தான் என உறுதியாக கூறினார்.
சர்பராஸ் கான் ரோஹித்தை கெஞ்சி ரிவ்யூ கேட்க வைத்தார். ரிவ்யூவில் அது கேட்ச் தான் என்பது தெரியவந்ததும் வில் யங் அவுட்டானார்.
சர்பராஸ் கான் ரோஹித்தை கெஞ்சிய இந்த தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் இந்த தருணத்தை பகிர்ந்து சர்பராஸ் கானின் செயலை பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |