இந்த இருவரை களமிறக்குங்கள்! இங்கிலாந்திடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரர் கூறிய யோசனை
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஷர்ஃபராஸ் மற்றும் மசூட்டை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் சோயிப் மாலிக் யோசனை கூறியுள்ளார்.
சோயிப் மாலிக் யோசனை
முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் 17ஆம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில், கடைசி டெஸ்டில் வெற்றி பெற இரண்டு வீரர்களை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரரான சோயிப் மாலிக் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஷர்ஃபராஸ் அகமது மற்றும் ஷான் மசூட் ஆகிய இருவரையும் பிளேயிங் 11-யில் களமிறக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஷர்ஃபராஸ் தனது அனுபவத்தை கொடுப்பார் மற்றும் ஷான் ஸ்திரத்தன்மை மூலம் அணிக்கு உதவுவார். கராச்சியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் நம் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் இன்ஷாஅல்லாஹ்' என தெரிவித்துள்ளார்.
- In my opinion, Pakistan should include @SarfarazA_54 & @shani_official in playing 11. Sarfaraz will bring much experience & Shan will help this team to have more stability. I hope our team will perform well in Karachi inshaAllah. #PakistanZindabad
— Shoaib Malik ?? (@realshoaibmalik) December 12, 2022