பிரான்ஸ் அரசியலில் புதிதாக கால் பதிக்கும் இளைய தலைமுறை பிரபலம்: யார் அவர்?
பிரான்ஸ் அரசியலில் புதிதாக கால் பதிக்கிறார் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன்.
யார் அந்த பிரபலம்?

உண்மையில், அவரை விட அவரது தந்தைதான் மிகவும் பிரபலம், நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி என்னும் வகையில் நேர்மறையாகவும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர், சிறை சென்றவர் என்பதால் எதிர்மறையாகவும் பிரபலமானவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

ஆம், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் மகனான லூயிஸ் சார்க்கோஸி (28), பிரான்ஸ் அரசியலில் கால் பதிக்கிறார்.
பிரான்ஸ் அரசியலைப் பொருத்தவரை, ஒரு விநோதமான நடைமுறை காணப்படுகிறது.
அதாவது, அமைச்சர் பதவி வகிப்பவர்கள் கூட, தங்கள் அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு மேயர் பதவிக்காக போட்டியிடுகிறார்கள்.
சமீபத்தில், பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சரான ரச்சிதா டதி (Rachida Dati), பாரீஸ் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
ஆக, அதே வழியில், லூயிஸ் சார்க்கோஸியும், Menton என்னும் நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளார்.
The son of Nicolas Sarkozy, the former French president, has the drive and determination to become Menton’s mayor — and doesn’t fear a ‘glorious defeat’ https://t.co/TXQmPOl2DV
— The Times and The Sunday Times (@thetimes) March 3, 2026
உள்ளூர் பிரச்சினைகளான வீடுகள் தட்டுப்பாடு, குற்றவாளிக் கும்பல்கள் பிரச்சினை ஆகியவற்றை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் களமிறங்குகிறார் லூயிஸ்.

அவர் எந்த கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிடாமல் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்றாலும், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சி வெற்றி பெற்றுவிடக்கூடாது எனக் கருதும் எதிர்க்கட்சிகள் லூயிஸுக்கு ஆதரவாக நிற்கின்றன.
ஆக, தன் தந்தைக்கு சிறைக்குச் சென்ற ஜனாதிபதி என்னும் கெட்ட பெயர் இருந்தாலும், அது தன் அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அறிவதற்காகவும், அரசியலில் கால் பதிப்பதற்காகவும் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார் லூயிஸ்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |