சார்பட்டா பரம்பரை ரிலீஸ்: பா. ரஞ்சித் அதிரடி முடிவு
பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் 'சார்பட்டா பரம்பரை' தீரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை. அப்படத்தின் வெளியீடு குறித்து அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித், அதனைத் தொடர்ந்து கபாலி, காலா படங்களில் ரஜினியின் இமேஜுக்கேற்ப சில காம்ப்ரமைஸ்கள் செய்திருந்தார்.
மெட்ராஸ் போன்று ஒரு படத்தை அவர் எப்போது தருவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
வடசென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். கே9 ஸ்டுடியோஸுடன் இணைந்து ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஆர்யா, பசுபதி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தை OTT-யில் வெளியிட ரஞ்சித் முடிவு செய்துள்ளார்.
திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். Amazon Prime Video இப்படத்தை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டார்கள், ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஒலி கலவை நிறைவடைந்தது@beemji@officialneelam#சார்பட்டா pic.twitter.com/F15s0NQlvc
— Santhosh Natarajan (@santosanthosh) July 5, 2021