ரஜினிகாந்த்-சசிகலா திடீர் சந்திப்பு!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளரான வி.கே.சசிகலா நடிகர் ரஜினகாந்தை சந்தித்துள்ளார்.
திங்கட்கிழமை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சசிகலா அவரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததுடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சசிகலா-ரஜினி சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதாவும் உடனி இருந்துள்ளார். கிட்டதட்ட ஒரு நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் revascularization அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரஜினிகாந்த் தற்போது குணமடைந்து உடல் நலத்துடன் இருக்கிறார்.
கடந்த அக்டோபர் 31ம் திகதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், தற்போது போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.