நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா!
நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்ற வி.கே.சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.
நாளை அதிமுக பொன்விழாவை ஒட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தியுள்ளது கட்சியில் புதிய திருப்பம் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு, வழியெங்கும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
அதிமுக கொடியுடன் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் pic.twitter.com/5ssYxCdXCb
— Velmurugan Paranjothi / வேல்முருகன் பரஞ்ஜோதி (@Vel_Vedha) October 16, 2021
மெரினாவுக்கு செல்லும் வழியில் தி.நகரில் உள்ள ஸ்ரீனிவச பெருமாள் பத்மாவதி தாயார் ஆலயத்தில் சசிகலா வழிபாடு செய்தார்.
?ஜெ.நினைவிடத்தில் மரியாதை செலுத்த @AIADMKOfficial கட்சிக் கொடி பொருத்திய காரில் வருகிறார் சசிகலா
— Àanthai Répørter (MASKUpTN) ? (@aanthaireporter) October 16, 2021
தொண்டர்கள் புதுசாக #புரட்சித்தாய் என்று குரல் எழுப்புகிறார்கள்#சசிகலா #Sasikala pic.twitter.com/QGyXbqqwDC
இதனையடுத்து மெரினாவுக்கு சென்ற சசிகலா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா நினைவிடங்களிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கண்ணீர் மல்க தோழிக்கு மரியாதை செலுத்திய சசிகலா..#Sasikala #Jayalalithaa #Admk #AMMK pic.twitter.com/lmmBDmJuov
— Breaking News Live (@BNL_Online) October 16, 2021
பின் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மலர்ஞசலி செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, என் மனதில் தாங்கி வைத்திருந்த சுமையை அம்மாவின் முன் இறக்கி வைத்துள்ளேன்.
நிச்சியம் தொண்டர்களையும் அதிமுக-வையும் தலைவரும்(எம்ஜிஆர்) ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்பிக்கையோடு செல்வதாக சசிகலா கூறினார்.
ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு சத்தியமும் செய்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.